936 பயனாளிகளுக்கு இலவச வீட்டு மனைப்பட்டா
உளுந்தூர்பேட்டையில் 936 பயனாளிகளுக்கு இலவச வீட்டு மனைப்பட்டா கலெக்டர், எம்.எல்.ஏ. வழங்கினர்
உளுந்தூர்பேட்டை
உளுந்தூர்பேட்டை தாலுகா அலுவலகம் சார்பில் பயனாளிகளுக்கு இலவச வீட்டு மனைப்பட்டா வழங்கும் நிகழ்ச்சி அங்குள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. திருக்கோவிலூர் கோட்டாட்சியர் யோகஜோதி வரவேற்றார். உளுந்தூர்பேட்டை ஒன்றியக்குழு தலைவர் ராஜவேல், நகராட்சி தலைவர் திருநாவுக்கரசு, துணை தலைவர் வைத்தியநாதன், திருநாவலூர் அத்மா குழு தலைவர் கேவி.முருகன், நகராட்சி கவுன்சிலர் டேனியல் ராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில் மாவட்ட கலெக்டர் ஷ்ரவன்குமார், உளுந்தூர்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் மணிக்கண்ணன் ஆகியோர் கலந்துகொண்டு 936 ஏழை, எளிய மக்களுக்கு இலவச வீட்டு மனைப்பட்டா வழங்கினர். இதில் அரசு அதிகாரிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர். முடிவில் உளுந்தூர்பேட்டை தாசில்தார் மணிமேகலை நன்றி கூறினார்.