இலவச கண் சிகிச்சை முகாம்

பாளையங்கோட்டை கீழநத்தம் பஞ்சாயத்தில் இலவச கண் சிகிச்சை முகாம் நடந்தது.

Update: 2022-10-22 18:48 GMT

இட்டமொழி:

பாளையங்கோட்டை வடக்கு வட்டாரத்திற்கு உட்பட்ட கீழநத்தம் பஞ்சாயத்தில் ரூபி மனோகரன் சாரிடபிள் டிரஸ்ட், நெல்லை அகர்வால் கண் மருத்துவமனை சார்பில், இலவச கண் சிகிச்சை மற்றும் பரிசோதனை முகாம் நடந்தது. ரூபி மனோகரன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கி முகாமை தொடங்கி வைத்தார். இதில் பொதுமக்களுக்கு கண் பரிசோதனை செய்து சிகிச்சை அளிக்கப்பட்டது.

மேலும் கிராம மக்கள் முன்வைத்த பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற ஏற்பாடு செய்வதாக ரூபி மனோகரன் எம்.எல்.ஏ. தெரிவித்தார். மேலும் கிராம மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார். கிராம மக்கள் அனைவருக்கும் கூட்டாஞ்சோறு வழங்கி அவர்களோடு ஒன்றாக அமர்ந்து சாப்பிட்டார்.

நிகழ்ச்சியில் நாங்குநேரி தொகுதி பொறுப்பாளர் அழகியநம்பி, கீழநத்தம் பஞ்சாயத்து தலைவர் அனுராதா, துணைத்தலைவர் சுகன்யா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்