இலவச கண் சிகிச்சை முகாம்
கோவில்பட்டியில் இலவச கண் சிகிச்சை முகாம் நடந்தது.
கோவில்பட்டி:
கோவில்பட்டி தெற்கு புதுகிராமத்தில் இல்லத்து பிள்ளைமார் இளைஞர் சமூக சங்கம் மற்றும் நெல்லை அரவிந்த் கண் மருத்துவமனை இணைந்து இலவச கண் சிகிச்சை முகாமை நடத்தியது. சங்க தலைவர் சங்கரன் தலைமை தாங்கினார். நகரசபை கவுன்சிலர் முத்துராஜ் முகாமை தொடங்கி வைத்தார். நகரசபை கவுன்சிலர்கள் சுரேஷ், சண்முகவேல், வியாபாரிகள் சங்க தலைவர் ரமேஷ், தனசேகரன், வெங்கடேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
முகாமில் டாக்டர்கள் ஜெயப்பிரியா, ஸ்ரீதர் தலைமையில் மருத்துவக் குழுவினர் 100 பேருக்கு இலவச கண் பரிசோதனை செய்தார்கள்.