இலவச கண் பரிசோதனை முகாம்

கோவில்பட்டியில் இலவச கண் பரிசோதனை முகாம் நடந்தது.;

Update:2023-02-08 00:15 IST

கோவில்பட்டி:

கோவில்பட்டி இ. எம். ஏ. ராமச்சந்திரன் ரத்ததான கழகம் மற்றும் நெல்லை ஐ பவுண்டேஷன் கண் மருத்துவமனை ஆகியவை இணைந்து இலவச கண் பரிசோதனை முகாமை நடத்தின. தொடக்க விழாவிற்கு இ.எம்.ஏ.ஆர். ஜவுளி கடை அதிபர் ஆர். வெங்கட்ரமணி தலைமை வகித்து தொடங்கி வைத்தார். ஜவுளிகடை அதிபர் ஆர். முருகன் வரவேற்று பேசினார். முகாமில் நெல்லை ஐ பவுண்டேஷன் கண் மருத்துவமனை டாக்டர் முகமது பைசல் தலைமையில் மருத்துவக் குழுவினர் கண் பரிசோதனை நடத்தினர்.

முகாமில் 400 பேருக்கு கண் பரிசோதனை நடத்தப் பட்டது. இதில் 23 பேர் மேல் சிகிச்சைக்கு தேர்வு செய்யப்பட்டனர். முகாம் ஏற்பாடுகளை இ.எம்.ஏ. ராமச்சந்திரன் ரத்ததான கழக அமைப்பாளர் டி. ஆர். தங்கராஜ் தலைமையில் உறுப்பினர்கள் மற்றும் ஜவுளிக்கடை நிறுவன ஊழியர்கள் செய்திருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்