இலவச கண் பரிசோதனை முகாம்
கே.வி.குப்பத்தில் இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது.;
கே.வி.குப்பத்தில் வேப்பங்கநேரி ஊராட்சி மன்றம், சென்னை டாக்டர் அகர்வால் கண் மருத்துவமனை, வேலூர் மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம் ஆகியவை சார்பில் இலவச கண் பரிசோதனை முகாம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் நடைபெற்றது. ஊராட்சி மன்ற தலைவர் மோகன் தலைமை தாங்கினார். கண் மருத்துவ குழுவினர் முகாமில் கலந்து கொண்டவர்களுக்கு பரிசோதனை செய்தனர். அறுவை சிகிச்சைக்கு தேர்வு செய்யப்பட்டவர்கள், கண்ணாடி தேவைப்படுவோர் என சுமார் 250 பேருக்கு கண் பரிசோதனையும் ஆலோசனையும் வழங்கப்பட்டது.