விலையில்லா சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சி
விலையில்லா சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சி
முத்துப்பேட்டையில் உள்ள அரசு பள்ளி மாணவ-மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சி பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் கார்த்திக் தலைமையில் நடைபெற்றது. பேரூராட்சி மன்ற தலைவர் மும்தாஜ் நவாஸ்கான், துணைத்தலைவர் ஆறுமுக சிவக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பள்ளியின் தலைமையாசிரியை மாலினி வரவேற்றார். இதில் மாரிமுத்து எம்.எல்.ஏ. கலந்துகொண்டு மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்களை வழங்கினார். நிகழ்ச்சியில் பேரூராட்சி மன்ற கவுன்சிலர்கள், பெற்றோர் ஆசிரியர் கழக நிர்வாகிகள், அனைத்து பள்ளியின் தலைமையாசிரியர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் கலந்துகொண்டனர். முடிவில் உதவி தலைமையாசிரியை வனிதா நன்றி கூறினார்.