மூக்குப்பீறி பள்ளியில் இலவச சைக்கிள் வழங்கும் விழா
மூக்குப்பீறி பள்ளியில் இலவச சைக்கிள் வழங்கும் விழா நடைபெற்றது.
நாசரேத்:
நாசரேத் அருகே உள்ள மூக்குப்பீறி தூய மாற்கு மேல்நிலைப்பள்ளியில் தமிழக அரசின் மாணவ- மாணவிகளுக்கான விலையில்லா சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு ஆழ்வார்திருநகரி யூனியன் தலைவர் ஜனகர் தலைமை தாங்கி 98 மாணவ மாணவிகளுக்கு சைக்கிள்கள் வழங்கினார். மூக்குப்பீறி ஊராட்சி மன்றத்தலைவி கமலா கலையரசு முன்னிலை வகித்தார். பள்ளியின் தாளாளர் செல்வின் அனைவரையும் வரவேற்றார்.
முன்னதாக திருச்செந்தூர் மண்டல அளவிலான பள்ளிகளுக்கு இடையேயான போட்டியில் வெற்றி பெற்ற தூய மாற்கு மேல்நிலைப்பள்ளி மாணவ- மாணவிகளுக்கு பதக்கமும், சான்றிதழும் வழங்கி பாராட்டு தெரிவிக்கப்பட்டது. மூக்குப்பீறி ஊராட்சி மன்ற உறுப்பினர் கலையரசு கலந்து கொண்டார். பள்ளி தலைமை ஆசிரியர் எட்வர்ட் நன்றி கூறினார்.