மத்திய அரசின் போட்டி தேர்வுக்கு 'நான் முதல்வன்' திட்டத்தில் இலவச பயிற்சி வகுப்புகள்

மத்திய அரசின் போட்டித்தேர்வுக்கு நான் முதல்வன் திட்டத்தில் பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட உள்ளதாக கலெக்டர் தெரிவித்துள்ளார்.

Update: 2023-05-06 12:18 GMT

மத்திய அரசின் போட்டித்தேர்வுக்கு நான் முதல்வன் திட்டத்தில் பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட உள்ளதாக கலெக்டர் தெரிவித்துள்ளார்.

வேலூர் கலெக்டர் குமாரவேல்பாண்டியன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

மத்திய அரசு பணியாளர் தேர்வு ஆணையத்தால் ஸ்டாப் செலக்சன் கமிஷன் போட்டி தேர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதில் பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம். இதன் மூலம் நாடு முழுவது் காலியாக உள்ள 7 ஆயிரத்து 500 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. தேர்வு எழுதுவோருக்கு தமிழ்நாடு அரசின் 'நான் முதல்வன்' திட்டத்தின் கீழ் தற்போது இலவச பயிற்சி வகுப்புகள் அளிக்கப்பட உள்ளது.

தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் தங்களது புகைப்படம், எஸ்.எஸ்.சி. (சி.ஜி.எல்.) போட்டித்தேர்வுக்கு விண்ணப்பித்தற்கான சான்று மற்றும் ஆதார்எண் ஆகிய விவரங்களுடன் வேலூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தை நேரில் தொடர்பு கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பங்களை https://docs.google.com/forms/d/e/1FAlpQLSf2ce9CL2TN7mal6VA9ZunCLjjX4uOfNxUtQ4WQtfQmkjNZjg/viewform என்றஇணையதளத்தில் பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்ய வேண்டும்.

இந்த பயிற்சி வகுப்புகளில் மத்திய அரசு பணிகளுக்கு தயாராகி வரும் வேலூர் மாவட்டத்தை சேர்ந்த வேலை தேடும் இளைஞர்கள் கலந்து கொண்டு பயன்பெறலாம்.

இவ்வாறு அவர் அதில் தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்