மாணவ-மாணவிகளுக்கு இலவச புத்தகங்கள்

கண்ணமங்கலம் நூலகத்தில் மாணவ-மாணவிகளுக்கு இலவச புத்தகங்கள் வழங்கப்பட்டது.

Update: 2023-04-24 12:10 GMT

கண்ணமங்கலம்

கண்ணமங்கலம் கிளை நூலகத்தில் உலக புத்தக தின விழா பேருராட்சி தலைவர் மகாலட்சுமி கோவர்த்தனன் தலைமையில் நடைபெற்றது.

வாசகர் வட்டத்தலைவர் பி.சி.கார்த்திகேயன், வார்டு உறுப்பினர் சாகுல் அமீது ஆகியோர் முன்னிலை வகித்தனர். கிளை நூலகர் சிவசங்கர் வரவேற்று பேசினார்.

உலக புத்தக தின விழா முன்னிட்டு மாணவ-மாணவிகளுக்கு இலவசமாக புத்தகங்கள் வழங்கப்பட்டது.

இதில் வாசகர் வட்ட உறுப்பினர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர் முடிவில் ஆசிரியர் திருமால் நன்றி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்