மாணவர்களுக்கு விலையில்லா சைக்கிள்- கருமாணிக்கம் எம்.எல்.ஏ. வழங்கினார்

மாணவர்களுக்கு விலையில்லா சைக்கிளை கருமாணிக்கம் எம்.எல்.ஏ. வழங்கினார்.;

Update:2023-09-20 00:15 IST

தொண்டி

திருவாடானை தாலுகா ஓரியூர் புனித அருளானந்தர் மேல்நிலைப் பள்ளியில் மாணவ, மாணவிகளுக்கு தமிழக அரசின் விலையில்லா சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. கருமாணிக்கம் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். யூனியன் தலைவர் முகமது முக்தார், திருவாடானை தி.மு.க. தெற்கு ஒன்றிய செயலாளர் ஓடவயல் ராஜாராம் முன்னிலை வகித்தனர். அனைவரையும் பள்ளி தாளாளர் சைமன் ராஜ் வரவேற்றார். விழாவில் 157 மாணவ, மாணவிகளுக்கு கருமாணிக்கம் எம்.எல். ஏ. சைக்கிள்களை வழங்கி பேசினார். அப்போது பள்ளியின் சார்பில் கூடுதல் பஸ் வசதி செய்து தர வேண்டும், பள்ளி முன்பு வேகத்தடை அமைக்க வேண்டும் என எம்.எல்.ஏ.விடம் கோரிக்கை வைக்கப்பட்டது. நிகழ்ச்சியில் காங்கிரஸ் வட்டார தலைவர்கள் தட்சிணாமூர்த்தி, கோடனூர் கணேசன், ஓரியூர் திருத்தல அதிபர் ஆல்பர்ட் முத்துமாலை, பொருளாளர் ரபேல் அலெக்சாண்டர், காங்கிரஸ் மாவட்ட துணை தலைவர்கள் முருகானந்தம், மரியஅருள், ஓரியூர் மனோகரன், ஓரியூர் முன்னாள் ஊராட்சி தலைவர்கள் புலியூர் வெங்கடேசன், வெள்ளையபுரம் பரக்கத்அலி, ஊராட்சிமன்ற தலைவர் நிரோஷா கோகுல், ஊராட்சி துணை தலைவர் அசரப் அலி மற்றும் ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். 

Tags:    

மேலும் செய்திகள்