மாணவ- மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்
அரங்கல்துருகம் பள்ளியில் மாணவ- மாணவிகளுக்கு வில்வநாதன் எம்.எல்.ஏ. விலையில்லா சைக்கிள் வழங்கினார்.
ஆம்பூர் அடுத்த அரங்கல்துருகம் பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் விலையில்லா சைக்கிள் வழங்கும் விழா நடைபெற்றது. சிறப்பு அழைப்பாளராக ஆம்பூர் தொகுதி எம்.எல்.ஏ. வில்வநாதன், மாதனூர் ஒன்றியக்குழு தலைவர் சுரேஷ்குமார் ஆகியோர் கலந்து கொண்டு 49 மாணவ- மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்களை வழங்கினார்கள்.
இதில் முதன்மை கல்வி அலுவலர் முனிசுப்ரமணியன், மாதனூர் ஒன்றியக்குழு துணைத்தலைவர் சாந்தி சீனிவாசன், ஒன்றியக்குழு உறுப்பினர்கள், ஊராட்சி மன்ற தலைவர்கள், ஆசிரியர்கள் மற்றும் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.