350 மாணவ- மாணவிகளுக்கு இலவச சைக்கிள்

350 மாணவ- மாணவிகளுக்கு இலவச சைக்கிள்களை தேவராஜி எம்.எல்.ஏ. வழங்கினார்.

Update: 2022-09-04 16:44 GMT

கந்திலி ஒன்றியம் கெஜல்நாயக்கன்பட்டி அரசு ஆண்கள் மற்றும் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் தமிழக அரசின் இலவச சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவரும், ஒன்றிய செயலாளருமான எஸ்.கே.டி.அசோக்குமார் தலைமை தாங்கினார். தலைமை ஆசிரியர் ஏ.எஸ்.கோவிந்தன் முன்னிலை வகித்தார். ஆசிரியர் ரவிச்சந்திரன் வரவேற்றார்.

சிறப்பு அழைப்பாளராக ஜோலார்பேட்டை தொகுதி க‌.தேவராஜி எம்.எல்.ஏ., மாவட்ட ஊராட்சிக் குழு தலைவர் என்.கே.ஆர்.சூர்யகுமார் கலந்துகொண்டு 350 மாணவ-மாணவிகளுக்கு இலவச சைக்கிள்கள் வழங்கி பேசினர்.

நிகழ்ச்சியில் கந்திலி ஒன்றியக்குழு தலைவர் திருமதி திருமுருகன், துணைத்தலைவர் மோகன்குமார், ஊராட்சி மன்ற தலைவர் நந்தினி சரவணன், ஒன்றியக் குழு உறுப்பினர் நீலாமல் அசோக் குமார் உள்பட ஊராட்சி மன்ற தலைவர்கள், மாணவ -மாணவிகள், பெற்றோர்கள் கலந்து கொண்டனர். முடிவில் பள்ளி தலைமை ஆசிரியர் சாமிநாதன் நன்றி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்