315 மாணவர்களுக்கு விலையில்லா சைக்கிள்

சின்னசேலம் அருகே 315 மாணவர்களுக்கு விலையில்லா சைக்கிள்கள் வழங்கும் விழா நடந்தது.

Update: 2022-09-20 18:45 GMT

சின்னசேலம், 

சின்னசேலம் அருகே நயினார்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளியில் தமிழக அரசின் சார்பில் மாணவர்களுக்கு விலையில்லா சைக்கிள்கள் வழங்கும் விழா நடைபெற்றது. இதற்கு ஒன்றியக்குழு தலைவர் சத்தியமூர்த்தி தலைமை தாங்கி ரூ, 15 லட்சம் மதிப்பில் 315 மாணவ,மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்களை வழங்கி பேசினார். ஊராட்சி மன்ற தலைவர் மலர்கொடி அன்புசெழியன் முன்னிலை வகித்தார். பள்ளியின் தலைமை ஆசிரியர் நெடுஞ்செழியன் வரவேற்றார். இதில் சின்னசேலம் ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் எழில்வசந்தன், துணை அமைப்பாளர் ஜெயசீலன், பெற்றோர்-ஆசிரியர் கழக தலைவர் கனகராஜ், ஒன்றிய கவுன்சிலர் சித்ரா மற்றும் ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள், பெற்றோர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்