இலவச ஆம்புலன்ஸ் சேவை தொடக்கம்
குமாரபாளையத்தில் இலவச ஆம்புலன்ஸ் சேவை தொடங்கப்பட்டது.
குமாரபாளையம்
குமாரபாளையம் நகராட்சி முன்னாள் தலைவர் எஸ்.சேகர் நினைவு அறக்கட்டளை சார்பில் இலவச ஆம்புலன்ஸ் சேவை தொடக்க நிகழ்ச்சி நடந்தது. நகர தி.மு.க. செயலாளர் செல்வம் தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர் செல்வராஜ் முன்னிலை வகித்தார். மேற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் மதுரா செந்தில் கலந்து கொண்டு அறக்கட்டளையின் அலுவலகத்தை திறந்து, இலவச ஆம்புலன்ஸ் சேவையை தொடங்கி வைத்தார். இதில் மாவட்ட பொருளாளர் ராஜாராம், கவுன்சிலர்கள் சத்தியசீலன், ரங்கநாதன், சேகர் நினைவு அறக்கட்டளை மற்றும் தி.மு.க. நிர்வாகிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர். முன்னதாக துணை செயலாளர் கே.ஏ.ரவி வரவேற்றார். முடிவில் கவுன்சிலர் கதிரவன் நன்றி கூறினார்.