ரூ.7½ லட்சம் மோசடி; ஒருவர் கைது

அரசு வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.7½ லட்சம் மோசடி செய்த வழக்கில் ஒருவர் கைது செய்யப்பட்டார்.

Update: 2023-04-05 20:02 GMT

மதுரை சுப்பிரமணியபுரத்தை சேர்ந்தவர் சக்திவேல் மகள் ஸ்ரீ துர்கா (வயது 23). இவரிடம் புதூரை அடுத்த கொடிக்குளம் தனலட்சுமி நகரை சேர்ந்த முத்துக்குமார் (50) என்பவர் அரசு வேலை வாங்கி தருவதாக கூறியுள்ளார். அவரது பேச்சை நம்பிய ஸ்ரீதுர்கா ரூ.11 லட்சம் கொடுத்துள்ளார். பணத்தை பெற்றுக்கொண்ட முத்துக்குமார் அவர் தெரிவித்தப்படி வேலை வாங்கி தராமல் ஏமாற்றி வந்தது தெரியவந்தது. பின்னர் ஸ்ரீதுர்கா தான் கொடுத்த பணத்தை திருப்பிக் கேட்டுள்ளார்.அதில் ரூ.3½ லட்சத்தை மட்டும் திருப்பி கொடுத்துள்ளார். மீதி பணத்தை கேட்டபோது அவரை முத்துக்குமார் மற்றும் அவரது குடும்பத்தினர் மிரட்டியுள்ளனர். இது குறித்து ஸ்ரீதுர்கா புதூர் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் முத்துக்குமார் மற்றும் அவரது மனைவி, மகன், மருமகன் என 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர். பின்னர் போலீசார் விசாரணை நடத்தி முத்துக்குமாரை கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்