தனியார் நிறுவன ஊழியரிடம் ரூ.5 லட்சம் மோசடி

வீடு வாங்கித் தருவதாக கூறி தனியார் நிறுவன ஊழியரிடம் ரூ.5 லட்சம் மோசடி செய்த 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2022-08-12 15:30 GMT

வீடு வாங்கித் தருவதாக கூறி தனியார் நிறுவன ஊழியரிடம் ரூ.5 லட்சம் மோசடி செய்த 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

தனியார் நிறுவன ஊழியர்

நீலகிரி மாவட்டம் பில்லிகொம்பை பகுதியை சேர்ந்தவர் நரசிம் மன் (வயது 30). தனியார் நிறுவன ஊழியர். இவர், முகநூலில் கோவையில் வீடு விற்பனை என்ற விளம்பரத்தை பார்த்து அதில் குறிப்பிட்டிருந்த செல்போன் எண்ணை தொடர்பு கொண்டு பேசினார்.

அதில் பேசிய நபர் கோவை லட்சுமிமில் சிக்னல் அருகே உள்ள தங்களது கட்டுமான நிறுவன அலுவலகத்திற்கு நேரில் வந்தால் வீடு வாங்கித்தருவது குறித்து பேசலாம் என்று கூறியுள்ளார். இதை நம்பிய நரசிம்மன் கடந்த சில மாதங்களுக்கு முன்பு லட்சுமி மில் சிக்னலில் உள்ள அந்த கட்டுமான நிறுவனத்திற்கு வந்தார்.

வீடு வாங்க ஒப்பந்தம்

அப்போது அங்கிருந்தவர்கள் ஒரு வீட்டை காண்பித்து உள்ளனர். அந்த வீடு பிடித்திருப் பதாக கூறி நரசிம்மன் கடந்த மார்ச் மாதம் 4-ந் தேதி முன்பண மாக ரூ.1 லட்சம் கொடுத்தார். 9-ந் தேதி ரூ.4 லட்சம் கொடுத்து விட்டு 3 மாதத்திற்குள் வீட்டை வாங்குவதாக கூறி அவர்களுடன் ஒப்பந்தம் செய்து கொண்டார்.

இந்த நிலையில் அந்த நிறுவனத்தினர் கூறியது போல் அந்த வீட்டை நரசிம்மனுக்கு விற்பனை செய்யவில்லை என்று தெரிகி றது. இதனால் அதிர்ச்சி அடைந்த நரசிம்மன், அந்த நிறுவன மேலாளர் அன்பு சந்திரன் என்ற சந்திரன், தர்மேந்திரகுமார் ஆகியோரிடம் கேட்டுள்ளார்.

ரூ.5 லட்சம் காசோலை

அதற்கு அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்து உள்ளனர். இதனால் சந்தேகம் அடைந்த நரசிம்மன் அந்த வீடு குறித்து விசாரித்த போது, வேறொருவர் பெயரில் உள்ள வீட்டை அவர்கள் விற்க முயன்றது தெரியவந்தது.

இதனால் நரசிம்மன், அவர்களிடம் கொடுத்த பணத்தை திருப்பி தர வேண்டும் என்று கேட்டுள்ளார். உடனே அவர்கள் நரசிம்மனி டம் ரூ.5 லட்சத்திற்கான காசோலை கொடுத்தனர்.

அதை வங்கி யில் செலுத்திய போது, பணம் இல்லாமல் திரும்பியது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் மீண்டும் அவர்களை தொடர்பு கொண்டு பணத்தை கேட்டுள்ளார்.

2 பேர் கைது

ஆனால் அவர்கள் பணம் கொடுக்க மறுத்து மோசடி செய்ய முயன்றது தெரிய வந்தது. இது குறித்த புகாரின் பேரில் ரேஸ் கோர்ஸ் போலீசார் வழக்கு பதிவு செய்து வெரைட்டிஹால் ரோட்டை சேர்ந்த நாகேந்திரன், காந்திபுரத்தை சேர்ந்த தர்மேந்திரகுமார் ஆகிய 2 பேரை கைது செய்தனர்.

அன்பு சந்திரன், சரவணகுமார், பிரேமா நந்தினி, ஷைனி தாமஸ் ஆகிய 5 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்