செருப்புக்கடை உரிமையாளரிடம் ரூ.20 ஆயிரம் மோசடி

செருப்புக்கடை உரிமையாளரிடம் ரூ.20 ஆயிரம் மோசடி

Update: 2023-02-18 18:45 GMT

பீளமேடு

கோவை தொட்டிபாளையம் பிரிவு டாட்டா நகரை சேர்ந்தவர் ரமேஷ் குமார் (வயது 38). இவர் அதே பகுதியில் செருப்பு விற்பனை கடை மற்றும் ஆன்லைன் மூலம் பணம் டிரான்ஸ்பர் செய்யும் தொழில் செய்து வந்தார். இந்த நிலையில் கடந்த 12-ந் தேதி இவரது கடைக்கு ஒடிசா மாநிலத்தை சேர்ந்த ஹேமந்த் (35) என்பவர் வந்தார். அப்போது அவர் ரூ.1,300 மதிப்பிலான செருப்புகளை வாங்கினார். பின்னர் அவர் தனது சகோதரர் வங்கி கணக்கில் ரூ.20,000 செலுத்துமாறு கூறியுள்ளார்.

இதை நம்பிய ரமேஷ் குமார் அவர் கொடுத்த வங்கி கணக்கு எண்ணில் ரூ.20,000 ஆன்லைன் மூலம் அனுப்பி வைத்தார். பின்னர் ஹேமந்திடம் பணம் கேட்டார். அதற்கு அவர் பணம் கொடுக்க மறுத்ததுடன் தான் பாக்கெட்டில் வைத்திருந்த பேனா மற்றும் கத்தியை எடுத்து அவரது காதில் குத்தி விட்டு தப்பி ஓடினார். இதில் காதில் காயம் அடைந்த ரமேஷ் குமாரை அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த மோசடி குறித்து அளித்த புகாரின் பேரில் பீளமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Tags:    

மேலும் செய்திகள்