மாற்றுத்திறனாளியிடம் ரூ.6½ லட்சம் மோசடி

புதிய தொழில் தொடங்குவதாக கூறி மாற்றுத்திறனாளியிடம் ரூ.6½ லட்சம் மோசடி செய்த ஆந்திராவை சேர்ந்தவரை போலீசார் தேடி வருகிறார்கள்.

Update: 2022-09-07 18:20 GMT

புதிய தொழில் தொடங்குவதாக கூறி மாற்றுத்திறனாளியிடம் ரூ.6½ லட்சம் மோசடி செய்த ஆந்திராவை சேர்ந்தவரை போலீசார் தேடி வருகிறார்கள்.

புதிய தொழில்

மயிலாடுதுறை சேந்தங்குடி சீர்காழி மெயின்ரோட்டை சேர்ந்தவர் உதயபாலன். இவருடைய மனைவி அருணா (வயது 36). வாய் பேசமுடியாத மாற்றுத்திறனாளியான உதயபாலனுக்கு ஆந்திர மாநிலத்தில் வசித்து வரும் வாய் பேச முடியாத மாற்றுத் திறனாளியான நடராஜ் என்பவருடன் சமூகவலைதளம் மூலம் பழக்கம் ஏற்பட்டது. அப்போது நடராஜ் புதிய தொழில் தொடங்கப் போவதாகவும், அதில் உதயபாலனை கூட்டாளியாக சேர்த்துக் கொள்வதாகவும் கூறி நம்ப வைத்துள்ளார்.இதனை நம்பிய உதயபாலன் கடந்த ஜூன் மாதம் 1-ந் தேதி முதல் கடந்த 5-ந் தேதி வரை ஆன்லைன் மூலம் நடராஜின் வங்கி கணக்கிற்கு ரூ.6 லட்சத்து 52 ஆயிரம் அனுப்பியுள்ளார்.

போலீசில் புகார்

இதன்பிறகு உதயபாலன், நடராஜை தொடர்பு கொள்ள முயற்சித்துள்ளார். ஆனால் நடராஜ் செல்போன் அணைத்து வைக்கப்பட்டு இருந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த உதயபாலன் தனது மனைவி அருணா மூலம் மயிலாடுதுறை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். இதன்பேரில் மோசடி வழக்குப்பதிவு செய்த மயிலாடுதுறை போலீசார், நடராஜ் ஆந்திராவில் எங்கு வசிக்கிறார், அவர் வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளி போல் நடித்து ஏமாற்றி மோசடி செய்தாரா? என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகிறார்கள். 

Tags:    

மேலும் செய்திகள்