பெண்ணிடம் ரூ.5¼ லட்சம் மோசடி
அழகுசாதன பொருட்களை குறைந்த விலைக்கு தருவதாக கூறி பெண்ணிடம் ரூ.5¼ லட்சம் மோசடி செய்யப்பட்டது.
வெளிப்பாளையம்:
நாகூர் எம்.ஜி.ஆர் நகரைச் சேர்ந்தவர் ஷமிமாபானு (வயது39). இவரது செல்போனுக்கு கடந்த 24-ந்தேதி வந்த ஒரு குறுஞ்செய்தியில் அழகுசாதன பொருட்கள் குறைந்த விலைக்கு விற்பனை செய்யப்படுவதாகவும், தொடர்ந்து அந்த பொருட்களை வாங்கினால் ஏற்கனவே செலுத்திய பணம் திருப்பி செலுத்தப்படும் எனவும் இருந்துள்ளது. இதை நம்பிய ஷமிமாபானு, அந்த குறுஞ்செய்தி வந்த செல்போன் எண்ணில் தொடர்பு கொண்டு பேசியுள்ளார். அப்போது செல்போனில் பேசிய நபர் தெரிவித்த வங்கி கணக்குக்கு 8 தவணையாக ரூ.5 லட்சத்து 39 ஆயிரத்து 999 அனுப்பி உள்ளார். ஆனால் அந்த நபர் கூறியபடி அழகு சாதன பொருட்களை அனுப்பவில்லை.
இதை தொடர்ந்து அந்த நபரை தொடர்பு கொண்ட போது அவரது செல்போன் சுவிட் ஆப் செய்யப்பட்டிருந்தது. இதனால் தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த ஷமிமாபானு நாகை மாவட்ட சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடந்தி வருகின்றனர்.