மோட்டார் சைக்கிள் ஷோரூம் அமைக்க முயன்றவரிடம் ரூ.4½ லட்சம் மோசடி
மோட்டார் சைக்கிள் ஷோரூம் அமைக்க முயன்றவரிடம் ரூ.4½ லட்சம் மோசடி செய்யப்பட்டுள்ளது.
துறையூர்:
மோட்டார் சைக்கிள் ஷோரூம்...
துறையூரை அடுத்துள்ள செங்காட்டுப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் ஜெயபிரகாஷ்(வயது 47). இவர் சொந்தமாக மோட்டார் சைக்கிள்(இ-பைக்) ஷோரூம் அமைக்க முயற்சி மேற்கொண்டு இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் இவருக்கு திருவண்ணாமலை மாவட்டம் ராய வேலூர் பகுதியை சேர்ந்த பார்த்தசாரதி என்பவரின் அறிமுகம் கிடைத்துள்ளது.
இதையடுத்து அவர், ஜெயபிரகாஷிடம் எலக்ட்ரானிக் மோட்டார் ஷோரூம் அமைக்க 'டீலர்ஷிப்' வாங்கி தருவதாக கூறியுள்ளார். இதற்காக அவர் கூறியபடி பார்த்தசாரதியின் மனைவி ரசிகா வினோதினியின் வங்கி கணக்கில் ரூ.4 லட்சத்து 55 ஆயிரத்தை ஜெயபிரகாஷ் செலுத்தி உள்ளார்.
வழக்கு
ஆனால் 2 மாதங்களுக்கு மேலாகியும் பார்த்தசாரதி உறுதியளித்தபடி 'டீலர்ஷிப்' பெற்று தரவில்லை. அவரை பலமுறை தொடர்பு கொண்டும் பார்த்தசாரதி முறையான தகவல் தெரிவிக்கவில்லை என்று கூறப்படுகிறது. இது குறித்து துறையூர் போலீஸ் நிலையத்தில் ஜெயபிரகாஷ் புகார் கொடுத்தார். அதன் பேரில் பார்த்தசாரதி மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.