அரசு வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.17 லட்சம் மோசடிதம்பதி மீது நடவடிக்கை எடுக்கக்கோரி மனு

அரசு வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.17 லட்சம் மோசடி தம்பதி மீது நடவடிக்கை எடுக்கக்கோரி மனு கொடுக்கப்பட்டது

Update: 2023-07-20 21:17 GMT

ஈரோடு கருங்கல்பாளையம் குயிலான் தோப்பு பகுதியை சேர்ந்தவர் ஈஸ்வரி (வயது 52) என்பவர் ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் நேற்று புகார் மனு ஒன்றை கொடுத்தார். அந்த மனுவில் அவர் கூறி இருந்ததாவது:-

பவானி அருகே உள்ள மைலம்பாடி பகுதியை சேர்ந்த ஒரு தம்பதி தாங்கள் நடத்தி வரும் திருமண தகவல் மையம் மூலம் என்னுடைய மகனுக்கு பெண் பார்த்து கொடுப்பதாக அறிமுகமானார்கள். அப்போது அவர்கள், தங்களுக்கு சென்னையில் உள்ள அரசு உயர் அதிகாரிகள் நன்கு பழக்கம் என்றும், அதன் மூலம் என்னுடைய மகனுக்கு மின்சார வாரியத்தில் அரசு வேலை வாங்கி தருவதாகவும், அதற்காக ரூ.15 லட்சம் முன்பணமாக தரவேண்டும்' என்றும் கூறினர். அதை நம்பி நான் 2 தவணைகளாக ரூ.15 லட்சம் அவர்களிடம் கொடுத்தேன். ஆனால் இதுவரை அந்த தம்பதி எனது மகனுக்கு வேலை வாங்கி தரவில்லை. மேலும் நான் கொடுத்த பணத்தையும் அவர்கள் திருப்பித்தரவில்லை. எனவே, அரசு வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.15 லட்சத்தை பெற்று மோசடி செய்த அந்த தம்பதி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் அவர் கூறி இருந்தார்.

இதேபோல் கருங்கல்பாளையம் கே.ஏ.எஸ். நகரை சேர்ந்த மலர்கொடி என்பவர், மேற்கண்ட தம்பதி எனது மகனுக்கு வங்கியில் வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.4 லட்சம் கேட்டு, முன்பணமாக ரூ.2 லட்சம் பெற்று மோசடி செய்து விட்டதாக போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் நேற்று புகார் மனு அளித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்