விழுப்புரம்
விழுப்புரம் சிங்காரவேலன் தெருவை சேர்ந்தவர் கார்த்திகேயன்(வயது 35). இவர் கணினி மென்பொருள் மற்றும் தொலைதொடர்பு தொழில்நுட்ப சாதனங்கள் வாங்கி விற்பனை செய்யும் தொழில் செய்து வருகிறார். சம்பவத்தன்று இவருடைய தொலைபேசிக்கு காஞ்சீபுரத்தை சேர்ந்த குமாரி என்பவர் தொடர்புகொண்டு, தான் தனியார் நிதி நிறுவனத்தில் இருந்து பேசுவதாக கூறியுள்ளார். அதன் பிறகு கார்த்திகேயன், அந்நிறுவனத்தில் ரூ.5 லட்சத்துக்கு பாலிசி போட்டுள்ளார். இதற்காக அவர் ரூ.1 லட்சத்தை 2 தவணைகளாக அந்நிறுவனத்தினர் கூறிய ஆன்லைன் கணக்குக்கு அனுப்பியுள்ளார். ஆனால் அந்நிறுவனத்தினர், கார்த்திகேயன் போட்ட பாலிசிக்கு பதிலாக வேறு பாலிசியை அவருக்கு அனுப்பி வைத்துள்ளனர். இதுகுறித்து கார்த்திகேயன், விழுப்புரம் தாலுகா போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் அந்த தனியார் நிதி நிறுவனத்தின் ஐதராபாத் பொது மேலாளர் மற்றும் குமாரி மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.