சமத்துவ பொங்கல் கொண்டாடிய நரிக்குறவர்கள்
தணிகைபோளூரில் நரிக்குறவர்கள் சமத்துவ பொங்கல் கொண்டாடினர்.
அரக்கோணத்தை அடுத்த தணிகை போளூர் நரிக்குறவர்கள் வசித்து வரும் பகுதியில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாட்டம் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு சிறப்பு அழைப்பாளராக அரக்கோணம் ஒன்றியக்குழு தலைவர் நிர்மலா சவுந்தர் கலந்து கொண்டு நரிக்குறவ மக்களுடன் இணைந்து பொங்கலிட்டு கொண்டாடினார்.
நிகழ்ச்சியில் தணிகை போளூர் ஊராட்சி மன்ற தலைவர் வெங்கடேசன், மாவட்ட கவுன்சிலர் அம்பிகா பாபு, அரக்கோணம் மேற்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் சவுந்தர், வார்டு உறுப்பினர்கள், ஒன்றியக் குழு உறுப்பினர்கள் உள்பட கட்சியினர் பலர் கலந்து கொண்டனர்.