புதிய ரேஷன்கடைக்கு அடிக்கல் நாட்டுவிழா
அரசூரில் புதிய ரேஷன்கடைக்கு அடிக்கல் நாட்டுவிழா நடந்தது.
தட்டார்மடம்:
சாத்தான்குளம் யூனியன் அரசூர் ஊராட்சிக்கு உட்பட்ட அதிசயபுரத்தில் அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தில் ரூ.8.67 லட்சம் மதிப்பில் புதிய ரேஷன் கடை கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. விழாவுக்கு சாத்தான்குளம் வட்டார வளர்ச்சி அலுவலர் ராஜேஷ்குமார் தலைமை தாங்கினார். துணைத்தலைவர் அப்பாத்துரை முன்னிலை வகித்தார். அரசூர் ஊராட்சித் தலைவர் தினேஷ்ராஜசிங், ஒன்றியக்குழு தலைவர் ஜெயபதி ஆகியோர் அடிக்கல் நாட்டி பணியை தொடங்கி வைத்தனர். ஊராட்சி செயலர் அருணாதேவி நன்றி கூறினார்.