சமையல் கூடத்திற்கு அடிக்கல் நாட்டு விழா

திசையன்விளையில் சமையல் கூடத்திற்கு அடிக்கல் நாட்டு விழா நடந்தது.

Update: 2023-01-05 19:10 GMT

திசையன்விளை:

திசையன்விளையில் அம்மா திருமண மண்டபம் கட்டி முடிக்கப்பட்டு சமையல் கூடம் இல்லாததால் பூட்டிக்கிடந்தது. தற்போது ரூ.40 லட்சம் செலவில் சமையல் கூடம் கட்டப்பட உள்ளது. அதற்கான அடிக்கல் நாட்டு விழா நடந்தது. பேரூராட்சி தலைவர் ஜான்சிராணி தலைமை தாங்கி அடிக்கல் நாட்டினார். செயல் அலுவலர் சாஜன் மத்யூ முன்னிலை வகித்தார். இதில் பேரூராட்சி கவுன்சிலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்