வரதராஜபெருமாள் கோவிலில் ராஜகோபுரம் கட்ட அடிக்கல் நாட்டு விழா
வரதராஜபெருமாள் கோவிலில் ராஜகோபுரம் கட்ட அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது.
புள்ளம்பாடி ஒன்றியம் வரகுப்பை கிராமத்தில் வரதராஜ பெருமாள் கோவில் உள்ளது. இக்கோவிலில் திருப்பணிகள் தொடங்கி நடந்து வருகிறது. இந்த நிலையில் மூன்று நிலை ராஜகோபுரம் அமைக்கும் பணிகளுக்காக அறநிலையத்துறை ஆணையர் பொது நல நிதியிலிருந்து ரூ.56 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு அதற்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. லால்குடி தொகுதி எம்.எல்.ஏ. சவுந்தரபாண்டியன் பணிகளை தொடங்கி வைத்தார். திருச்சி மண்டல இணை ஆணையர் பிரகாஷ், உதவி செயற் பொறியாளர் கவுதமன், ஒன்றிய குழு தலைவர் ரசியா கோல்டன் ராஜேந்திரன், செயல் அலுவலர் நித்தியா, ஊராட்சி மன்ற தலைவர் செல்லம் பெருமாள், துணை தலைவர் அண்ணாதுரை, வரகுப்பை கிராம நிர்வாகிகள், மற்றும் பொதுமக்கள்கலந்து கொண்டனர்.