ரூ.13 லட்சத்தில் அங்கன்வாடி கட்டிடம் கட்ட அடிக்கல் நாட்டு விழா

சுரண்டையில் ரூ.13 லட்சத்தில் அங்கன்வாடி கட்டிடம் கட்ட அடிக்கல் நாட்டு விழா நடந்தது.

Update: 2023-02-02 18:45 GMT

சுரண்டை:

சுரண்டை ஆலடிப்பட்டி பகுதியில் எம்.எல்.ஏ. தொகுதி மேம்பாட்டு நிதி மூலம் ரூ.11 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள அங்கன்வாடி மையம் திறப்பு விழா மற்றும் சுரண்டை வரகுணராமபுரம் பகுதியில் ரூ.13 லட்சம் மதிப்பீட்டில் புதிய அங்கன்வாடி கட்டிடம் கட்ட அடிக்கல் நாட்டு விழா நடந்தது. சுரண்டை நகராட்சி தலைவர் ப.வள்ளிமுருகன் தலைமை தாங்கினார். நகர காங்கிரஸ் தலைவர் எஸ்.கே.டி.ஜெயபால், தி.மு.க. நகர செயலாளர் ஜெயபாலன், சுரண்டை நகராட்சி ஆணையாளர் முகம்மதுசம்சுதீன், நகராட்சி கவுன்சிலர் சாந்தி தேவேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். புதிய அங்கன்வாடி கட்டிடத்தை எஸ்.பழனிநாடார் எம்.எல்.ஏ. திறந்து வைத்தார். வரகுணராமபுரத்தில் அங்கன்வாடி கட்டிடத்துக்கு தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் சிவபத்மநாதன் அடிக்கல் நாட்டினார்.

நிகழ்ச்சியில் ஒன்றிய செயலாளர் எம்.பி.எம்.அன்பழகன், ஆறுமுகசாமி, முன்னாள் நகர செயலாளர் பூல் பாண்டியன், கூட்டுறவு கணேசன், காங்கிரஸ் நிர்வாகிகள் பால் என்ற சண்முகவேல், பிரபாகர், தேவேந்திரன், பால்துரை, நகராட்சி கவுன்சிலர்கள் ஜெயராணி வள்ளிமுருகன், அமுதா சந்திரன், ராஜ்குமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்