நீரோடையில் ஆமை வடிவில் புதை படிம பாறை

நீரோடையில் ஆமை வடிவில் புதை படிம பாறை கண்டுபிடிக்கப்பட்டது.

Update: 2022-05-30 17:24 GMT

பெரம்பலூர்

பெரம்பலூர் மாவட்டத்தில் பல்வேறு வடிவங்களில் ஏராளமான தொல்லுயிரின புதை படிமங்கள் கிடைத்து வருகின்றனர். இந்த நிலையில் ஆலத்தூர் தாலுகா, கொட்டரை-சாத்தனூர் செல்லும் சாலையில் ஒரு நீரோடையில் பிரமாண்டமான ஆமை வடிவிலான புதை படிம பாறை ஒன்று பாதி புதையுண்ட நிலையில் கண்டறியப்பட்டுள்ளது. அந்த புதை படிமத்தை பொதுமக்கள் வியப்போடு பார்த்து செல்கின்றனர். இந்த புதை படிமத்தை உரிய முறையில் ஆய்வு செய்து, அதை பாதுகாத்திட மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்