சென்னையில் பார்முலா 4 கார் பந்தயம் - வெளியான அறிவிப்பு
தெற்காசியாவில் முதல் முறையாக ஸ்ட்ரீட் சர்க்யூட் பார்முலா 4 பந்தயம் சென்னையில் நடைபெறுகிறது.
சென்னை,
பெருநகர சென்னை மாநகராட்சி, சென்னை பெருநகர வளர்ச்சி ஆணையம், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், ரேஸிங் புரோமோஷன்ஸ் பிரைவேட் லிமிடெட் ஆகியவை இணைந்து, ரேசிங் சர்க்யூட் பார்முலா 4 கார்பந்தயம் போட்டியை நடத்தவுள்ளது.
அதன்படி சென்னையில் டிசம்பர் 9 மற்றும் 10 ஆகிய தேதிகளில் பார்முலா 4 கார்பந்தயம் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை தீவுத்திடல் மைதானத்தை சுற்றியுள்ள 3.5 கிலோ மீட்டர் சுற்றளவில், டிசம்பர் 9, 10 ஆகிய தேதிகளில் இரவு போட்டியாக நடத்தப்பட உள்ளது . தெற்காசியாவில் முதல் முறையாக ஸ்ட்ரீட் சர்க்யூட் பார்முலா 4 பந்தயம் சென்னையில் நடைபெறுகிறது.
பார்முலா 4 கார்பந்தயம் நடத்துவதற்காக தமிழக அரசு சார்பில் ரூ.42 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாடு விளையாட்டுத்துறை சார்பில் இன்று நடந்த சென்னை பார்முலா ரேசிங் சர்க்யூட் தொடக்க விழாவில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்றுள்ளார்.