முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா பிறந்த நாள்: தனது இல்லத்தில் உருவ படத்திற்கு மலர்தூவி எடப்பாடி பழனிசாமி மரியாதை
முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா பிறந்த நாளையொட்டி எடப்பாடி பழனிசாமி தன்னுடைய இல்லத்தில் ஜெயலலிதா உருவ படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
சென்னை,
மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் 75-வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது.
இந்த நிலையில் அவரது பிறந்த நாளையொட்டி அதிமுக இடைக்காலப் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சென்னை, கிரீன்வேஸ் சாலையில் உள்ள தன்னுடைய இல்லத்தில் ஜெயலலிதா உருவ படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
தொடர்ந்து சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சி தலைமை அலுவலக வளாகத்தில் உள்ள ஜெயலலிதா சிலைக்கு அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி மாலை அணிவித்து, மலர்தூவி மரியாதை செலுத்துகிறார்.
தமிழ்நாடு அரசு சார்பில் சென்னை காமராஜர் சாலையில் உள்ள ஜெயலலிதா சிலைக்கு மரியாதை செலுத்தப்பட உள்ளது.