மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடலுக்கு முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அஞ்சலி
விஜயகாந்தின் உடல் பொதுமக்கள் அஞ்சலி செலுத்துவதற்காக சென்னை தீவுத்திடலில் வைக்கப்பட்டுள்ளது.
சென்னை,
தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி காலமானார். தற்போது விஜயகாந்தின் உடல் பொதுமக்கள் அஞ்சலி செலுத்துவதற்காக சென்னை தீவுத்திடலில் வைக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், சென்னை தீவுத்திடலில் வைக்கப்பட்டுள்ள தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடலுக்கு முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் நேரில் சென்று மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார். அப்போது விஜயகாந்த் மனைவி பிரேமலதா, மகன்கள் மற்றும் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார். அவருடன் புகழேந்தி, ஜே.சி.டி.பிரபாகர் ஆகியோர் உடனிருந்தனர்.