பா.ஜனதா முன்னாள் நிர்வாகி போக்சோ சட்டத்தில் கைது

பா.ஜனதா முன்னாள் நிர்வாகி போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

Update: 2023-01-23 19:57 GMT

திருச்சி பிடாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் வினோத் (வயது 27). பா.ஜனதா இளைஞரணியின் முன்னாள் நிர்வாகியான இவர் 17 வயது சிறுமி ஒருவரிடம் காதலிப்பதாக கூறி நெருங்கி பழகி ஏமாற்றியதாக தெரிகிறது. எனவே இது தொடர்பாக விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஸ்ரீரங்கம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் சிறுமியின் பெற்றோர் புகார் செய்தனர். அதன் பேரில் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து வினோத்தை கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்