விருத்தாசலம் நகராட்சிக்குவரி கட்டாவிட்டால் ஜப்தி நடவடிக்கைஆணையாளர் எச்சரிக்கை

விருத்தாசலம் நகராட்சிக்கு வரி கட்டாவிட்டால் ஜப்தி நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஆணையாளர் எச்சரிக்கை விடுத்தாா்.

Update: 2023-02-21 18:45 GMT


விருத்தாசலம், 

விருத்தாசலம் வி.என்.ஆர்.நகர் பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவர் கடந்த 8 ஆண்டுகளுக்கு மேலாக நகராட்சிக்கு செலுத்த வேண்டிய சொத்து வரியை செலுத்தாமல் ரூ.93 ஆயிரம் பாக்கி வைத்துள்ளார். அவருக்கு பல முறை நோட்டீசு அனுப்பியும் அவர் வரியை கட்டவில்லை. இதையடுத்து நேற்று ஆணையாளர் சேகர் தலைமையில் துப்புரவு அலுவலர் பூபதி, உதவி பொறியாளர் ராமு, வருவாய் உதவியாளர்கள் ரவி, ராமகிருஷ்ணன், துப்புரவு மேற்பார்வையாளர், களப்பணியாளர்கள் அந்த நபரின் வீட்டுக்கு சென்று, வரி கேட்டனர். அவர் வரி செலுத்த முன்வராததால், அவர் வீட்டு குடிநீர் இணைப்பை துண்டித்தனர். விரைவில் சொத்து வரி செலுத்தாவிட்டால் ஜப்தி நடவடிக்கை மேற் கொள்ளப்படும் என எச்சரித்து விட்டு சென்றனர்.

இது குறித்து நகராட்சி ஆணையாளர் சேகர் கூறுகையில், விருத்தாசலம் நகராட்சிக்கு பொதுமக்கள் செலுத்த வேண்டிய குடிநீர் வரி, சொத்து வரி, தொழில் வரி, கடை வாடகை உள்ளிட்ட பல்வேறு வரி இனங்கள் என மொத்தம் ரூ.13 கோடி நிலுவையில் உள்ளது. இந்த வரியை குறிப்பிட்ட நாட்களுக்குள் செலுத்தாவிட்டால் ஜப்தி நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்