களக்காடு மலையில் மீண்டும் காட்டுத் தீ

களக்காடு மலையில் மீண்டும் காட்டுத் தீ ஏற்பட்டது.

Update: 2023-06-13 19:18 GMT

களக்காடு:

களக்காடு மேற்கு தொடர்ச்சி மலையில் கடந்த 10-ந் தேதி கருங்கல்கசம் பீட் ஆனை கல் பொடவு வனப்பகுதியில் திடீர் என காட்டுத் தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்ட நிலையில் நேற்று பகல் மீண்டும் காட்டுத் தீ விபத்து ஏற்பட்டது. வடகரை பீட் வனப்பகுதியில் பற்றிய தீ மள, மளவென பரவி எரிந்து வருகிறது. மலையில் காற்றின் வேகம் அதிகமாக இருப்பதால் தீ வேகமாக மற்ற பகுதிகளுக்கும் பரவி வருகிறது. இந்த தீயினால் பல ஏக்கர் பரப்பளவில் உள்ள அரியவகை மூலிகை செடிகள், மரங்கள் கருகி வருவதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் களக்காடு வனத்துறை ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றுகாட்டுத் தீயை கட்டுப்படுத்தும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். காட்டு தீயினால் அப்பகுதியில் புகை மண்டலம் சூழ்ந்துள்ளது. இதுபற்றி வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்