மெரினா கடற்கரையில் கிடந்த வெளிநாட்டு துப்பாக்கி - சென்னையில் பரபரப்பு

சென்னை மெரினா கடற்கரையில் கிடந்த துப்பாக்கியால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2022-10-26 10:27 GMT

சென்னை,

மெரினா கடற்கரை மணல் பரப்பில் நொச்சிக் குப்பத்தை சேர்ந்த சுரேஷ் என்பவர் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது கடற்கரை மணல் பரப்பில் கைதுப்பாக்கி ஒன்று கிடப்பதை அவர் பார்த்தார். இதையடுத்து அந்த துப்பாக்கியை சுரேஷ் எடுத்து பார்த்தார். அப்போது கலங்கரை விளக்கம் அருகே கடலோர பாதுகாப்பு குழுவின் உயிர் காக்கும் பிரிவில் பணியாற்றி வரும் காவலர் ஆரோக்கியராஜ்ஜிடம் சுரேஷ், அந்த துப்பாக்கியை கொடுத்தார்.

இதையடுத்து காவலர் ஆரோக்கியராஜ் துப்பாக்கியை, கடலோர பாதுகாப்பு குழும இன்ஸ்பெக்டரிடம் ஒப்படைத்தார். பின்னர் கடலோர பாதுகாப்பு குழுமம் சார்பில் மெரினா போலீசில் புகார் தெரிவிக்கப்பட்டது. துப்பாக்கியும் காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டது. இதையடுத்து மெரினா போலீஸ் இன்ஸ்பெக்டர் பால சுப்பிரமணியன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

கைத்துப்பாக்கியை மெரினாவில் போட்டுவிட்டு சென்ற நபர் யார்? என்பதை கண்டுபிடிக்க போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர். துப்பாக்கியின் லைசென்ஸ் உள்ளிட்ட விபரங்களை அவர்கள் சேகரித்து வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்