பெண்ணை திருமணம் செய்ய வற்புறுத்திய தனியார் நிறுவன ஊழியர் கைது

பெண்ணை திருமணம் செய்ய வற்புறுத்திய தனியார் நிறுவன ஊழியரை போலீசாா் கைது செய்தனா்.

Update: 2023-06-05 21:14 GMT

கடத்தூர்

கவுந்தப்பாடியைச் சேர்ந்த 33 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவருக்கு திருமணம் ஆகி மகன், மகள்கள் உள்ளனர். இந்த நிலையில் அவர் கோவையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். அப்போது அங்கு கோவை பொன்னையராஜபுரத்தைச் சேர்ந்த ராகுல் ஸ்ரீநாத் (வயது 37) என்பவர் ஊழியராக வேலை செய்து வந்தார். இருவரும் நட்பு முறையில் பழகி வந்துள்ளனர்.

இந்த நிலையில் ராகுல்ஸ்ரீநாத் அவரும், அந்த பெண்ணும் சேர்ந்து எடுத்த புகைப்படங்களை அவரிடம் காட்டி அவற்றை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு விடுவதாக மிரட்டியதாக கூறப்படுகிறது. மேலும் தன்னைத் திருமணம் செய்து கொள்ளுமாறும் கூறி அந்த பெண்ணை மிரட்டியுள்ளார். அந்தப் பெண்ணின் தாயையும் மிரட்டியதாக தெரிகிறது.

இதுகுறித்து அந்தப் பெண் கோபி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மேனகா வழக்குப்பதிவு செய்து ராகுல் ஸ்ரீநாத்தை கைது செய்து விசாரித்து வருகிறார்.

Tags:    

மேலும் செய்திகள்