மாற்றுத்திறனாளிகளுக்குசெயற்கை கால் வழங்க அளவீட்டு முகாம்

தேனி மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மற்றும் சென்னை தனியார் தொண்டு நிறுவனம் சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு செயற்கை கால் வழங்குவதற்கான அளவீட்டு முகாம் நடந்தது.

Update: 2023-01-22 18:45 GMT

தேனி மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மற்றும் சென்னை தனியார் தொண்டு நிறுவனம் சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு செயற்கை கால் வழங்குவதற்கான அளவீட்டு முகாம் நடந்தது. முகாமை மாவட்ட கலெக்டர் முரளிதரன் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். முகாமில் 100 பேருக்கு செயற்கை கால்கள் வழங்க திட்டமிடப்பட்டு அளவீட்டு பணி மேற்கொள்ளப்பட்டது. ஆனால், முகாமில் 162 மாற்றுத்திறனாளிகள் பங்கேற்றனர். அவர்களுக்கு டோக்கன் வழங்கி கால்கள் அளவீடு செய்யப்பட்டது.

முகாமில் அதிக அளவில் மாற்றுத்திறனாளிகள் பங்கேற்றதால் அலுவலக வளாகத்தில் போதிய இடவசதி இல்லை. இதனால், அலுவலகத்துக்கு வெளியே நுழைவு வாயில் படிக்கட்டு, சாய்தளம் ஆகிய இடங்களில் மாற்றுத்திறனாளிகள் தரையில் அமர்ந்து இருந்தனர். போதிய இருக்கை வசதி இன்றி தரையில் அமர்ந்து இருந்ததால், அவர்களுக்கு உடனடியாக இருக்கை வசதிகள் ஏற்படுத்த கலெக்டர் முரளிதரன் உத்தரவிட்டார். அதன்பேரில் அங்கு கூடுதல் நாற்காலிகள் வரவழைக்கப்பட்டு மாற்றுத்திறனாளிகள் அமருவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த முகாமில் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் (பொறுப்பு) ஸ்ரீனிவாசன் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்