3-வது நாளாக என்.ஐ.ஏ. அதிகாரிகள் விசாரணை
3-வது நாளாக என்.ஐ.ஏ. அதிகாரிகள் விசாரணை
திண்டுக்கல் மாவட்டத்தில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் குழுவினர் முகாமிட்டு 'பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா' அமைப்பினரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். அதன்படி அமைப்பின் மதுரை மண்டல தலைவராக இருந்த பழனியை சேர்ந்த டீக்கடை உரிமையாளர் முகமது கைசரிடம் கடந்த 2 நாட்களாக விசாரணை நடத்தினர். தொடர்ந்து 2-வது நாளாக நேற்று முன்தினம் முகமது கைசர், அவரது கடையில் வேலை செய்த சதாம் என்பவரிடம் விசாரணை நடைபெற்றது.
இந்நிலையில் நேற்று 3-வது நாளாக முகமது கைசர், சதாம் ஆகியோரிடம் என்.ஐ.ஏ. அதிகாரிகள் விசாரணை நடத்தினர். காலை 10 மணி முதல் மதியம் 3 மணி வரை பழனி போலீஸ்நிலைய பகுதியில் வைத்து விசாரணை நடைபெற்றது. அதையடுத்து என்.ஐ.ஏ. அதிகாரிகள் புறப்பட்டு சென்றனர். பழனி பகுதியில் கடந்த 3 நாட்களாக என்.ஐ.ஏ. அதிகாரிகள் நடத்திய விசாரணை பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.