சபரிமலை செல்லும் பாதயாத்திரை பக்தர்களுக்கு ஒளிரும் பட்டைகள் வழங்க கோரிக்கை

கம்பம் வழியாக சபரிமலை செல்லும் பாதயாத்திரை பக்தர்களுக்கு ஒளிரும் பட்டைகள் வழங்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்ைக விடுத்துள்ளனர்.

Update: 2022-11-27 18:45 GMT

சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு ஆண்டு முழுவதும் பக்தர்கள் சென்று வருகின்றனர். தற்போது கார்த்திகை மாதம் தொடங்கி மகர பூஜை வரை நாள்தோறும் சிறப்பு பூஜைகள் நடைபெறுகின்றன. இதனை காண தமிழகம் மட்டுமின்றி ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து ஏராளமான அய்யப்ப பக்தர்கள் வாகனங்களில் சென்று வருகின்றனர். இதேபோல் மாலை அணிந்து பாதயாத்திரையாகவும் தேனி மாவட்டம் கம்பம், கூடலூர், லோயர்கேம்ப், குமுளி மலைப்பாதை வழியாக ஏராளமான பக்தர்கள் செல்கின்றனர்.

இரவு நேரங்களில் மலைப்பாதையில் போதிய வெளிச்சம் இல்லாததால் பக்தர்கள் நடந்து செல்வது தெரியாமல் வாகனங்கள் மோதி விபத்து ஏற்படுகின்றன. இதனை தடுக்கும் வகையில் பாதயாத்திரை பக்தர்களுக்கு ஒளிரும் பட்டைகள் வழங்க வேண்டும்.

இதனை பக்தர்கள் தங்களது உடலிலோ அல்லது கைக்குச்சிகளில் ஒட்டிக் கொண்டு பயணிக்கும் போது எதிரே வருபவர்களுக்கு அடையாளப்படுத்தி விபத்துகள் ஏற்படாமல் தடுக்கப்படும். எனவே பக்தர்களுக்கு ஒளிரும் பட்டைகளை வழங்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்