மாநகராட்சியுடன் இணைக்கப்பட்ட பஞ்சாயத்து கட்டிடங்களுக்குசொத்து வரி எண் பெற விண்ணப்பிக்கலாம்

தூத்துக்குடி மாநகராட்சியுடன் இணைக்கப்பட்ட பஞ்சாயத்து கட்டிடங்களுக்கு சொத்து வரி எண் பெற விண்ணப்பிக்கலாம் என்று மேயர் ஜெகன்பெரியசாமி தெரிவித்துள்ளார்.

Update: 2022-12-25 18:45 GMT

தூத்துக்குடி மாநகராட்சியுடன் இணைக்கப்பட்டு உள்ள பஞ்சாயத்து பகுதிகளில் அமைந்து உள்ள கட்டிடங்களுக்கு பஞ்சாயத்து மூலம் ஏற்கனவே சொத்துவரி நிர்ணயம் செய்யப்பட்டு தொடர்ச்சியாக சொத்து வரி செலுத்தாததால் மாநகராட்சியுடன் இணைக்கப்பட்ட போது, கம்ப்யூட்டரில் பதிவேற்றம் செய்ய விடுபட்டு உள்ளது. எனவே மேற்படி கட்டிடங்களின் உரிமையாளர்கள் மாநகராட்சியை தொடர்பு கொண்டு சொத்து வரிவிதிப்புகளை உறுதி செய்யும் வகையில் பஞ்சாயத்து சொத்து வரி ரசீது, பத்திரம், பட்டா போன்ற ஆவணங்களை சமர்ப்பிக்க அவகாசம் வழங்கப்பட்டு உள்ளது. ஆனாலும் அந்த பகுதிகளில் அமைந்து உள்ள பல கட்டிடங்களுக்கு சொத்துவரி நிர்ணயம் செய்யாமல் இருப்பது தொடர்பாக பொதுமக்கள், வணிக நிறுவனங்கள், சமூக ஆர்வலர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரிடம இருந்து கோரிக்கைகள் வந்து உள்ளன. இதனை தொடர்ந்து மாநகராட்சி அலுவலர் மற்றும் பணியாளர்களின் நேரடி ஆய்வின் போது, வரிவிதிப்பு எண்கள் பெறப்படாதது உறுதி செய்யப்பட்டு உள்ளது.

எனவே இந்த குறைகளை நிவர்த்தி செய்து ஒழுங்குபடுத்தும் வகையில் சொத்துவரி நிர்ணயம் செய்யும் பொருட்டு பொதுமக்களின் அடிப்படை வசதிகள் மற்றும் அரசின் நலத்திட்ட உதவிகள் எளிதில் பெறும் வகையிலும், இதுவரை சொத்துவரி எண் பெறாதவர்கள் வருகிற 31-ந் தேதி வரை தங்கள் பகுதிக்கான மண்டல அலுவலகங்களை உரிய ஆவணங்களுடன் தொடர்பு கொள்ளலாம். எனவே பொதுமக்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

இந்த தகவலை தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி தெரிவித்து உள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்