அரசு போட்டி தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்பு

மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் அரசு போட்டி தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்பு நடக்கிறது என்று கலெக்டர் சாருஸ்ரீ தெரிவித்துள்ளார

Update: 2023-07-07 18:45 GMT

மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் அரசு போட்டி தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்பு நடக்கிறது என்று கலெக்டர் சாருஸ்ரீ தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

பயிற்சி வகுப்பு

தமிழ்நாடுஅரசு பணியாளர் தேர்வாணையத்தால் அறிவிக்கப்படவுள்ள குரூப்-1 முதல் குரூப்-4 வரையிலான காலிப்பணியிடங்களான துணை கலெக்டர், கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர், தட்டச்சர், சுருக்கெழுத்து தட்டச்சர் உள்ளிட்ட அனைத்து பணியிடங்களுக்கான எழுத்து தேர்வுக்கு இலவச பயிற்சி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் தன்னார்வபயிலும் வட்டம் மூலமாக நடக்கிறது.

குரூப்-1, குரூப்-2 தேர்வுகளுக்கு ஏதேனும் ஒரு பட்டப்படிப்பும், குரூப்-4 தேர்விற்கு 10-ம் வகுப்பு தேர்ச்சியும் கல்வி தகுதியாகும். இந்த பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ள விருப்பம் உள்ளவர்கள் தங்களது ஆதார் அட்டையின் நகல் மற்றும் 2 பாஸ்போர்ட் அளவு புகைப்படங்களுடன் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்திற்கு நேரில் சென்று பயன்பெறலாம்.

பதிவு செய்து கொள்ளலாம்

மேலும், தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையத்தால் அறிவிக்கப்பட்டுள்ள போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர், இரண்டாம் நிலை காவலர் தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்பும், வார இறுதி நாட்களில் மாதிரி தேர்வுகளும் நடக்கிறது. எனவே, திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த டி.என்.பி.எஸ்.சி. மற்றும் டி.என்.யு.எஸ்.ஆா்.பி. தேர்வுகளுக்கு தயாராகி வரும் தகுதியும், ஆர்வமும் உள்ள இளைஞர்கள் இந்த பயிற்சி வகுப்புகளை மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து பயன்பெறலாம்.

மேலும் தகவலுக்கு 04366-224226 தொலைபேசி எண்ணையோ அல்லது thiruvarurstudycircle@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியையோ தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்