பள்ளிகளில் மாணவிகளுக்கு இலவச சைக்கிள் வழங்கல்

பள்ளிகளில் மாணவிகளுக்கு இலவச சைக்கிள் வழங்கப்பட்டது.

Update: 2023-07-21 18:45 GMT

கோவில்பட்டி:

கோவில்பட்டி, உடன்குடி, ஆத்தூர் பள்ளிகளில் நடந்த விழாவில் மாணவ, மாணவிகளுக்கு இலவச சைக்கிள்கள் வழங்கப்பட்டது.

கோவில்பட்டி

கோவில்பட்டி அரசு மகளிர் மேல்நிலை பள்ளியில் அரசு இலவச சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ரெஜினி தலைமை தாங்கினார். மாவட்ட கல்வி அதிகாரி ஜெயபிரகாஷ் ராஜன், தொடக்க கல்வி அதிகாரி சுப்பாராஜ், உதவி திட்ட அலுவலர் முனியசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். பள்ளி தலைமை ஆசிரியை ஜெயலதா வரவேற்று பேசினார்.

நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கோவில்பட்டி நகரசபை தலைவர் கருணாநிதி கலந்து கொண்டு 476 மாணவிகளுக்கு தமிழக அரசின் இலவச சைக்கிள்களை வழங்கி பேசினார். நிகழ்ச்சியில் பள்ளி மேலாண்மை குழு தலைவர் ரெங்கம்மாள், நகரசபை கவுன்சிலர்கள் உலக ராணி, சித்ராதேவி மற்றும் பலர் கலந்து கொண்டனர். ஆசிரியை உஷா ஜோஸ்பின் நன்றி கூறினார்.

உடன்குடி

உடன்குடி பண்டாரஞ்செட்டிவிளை மேரிஆன் பெஸ்ட் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ்-2 மாணவிகளுக்கு தமிழக அரசின் இலவச சைக்கிள்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. சபை குருவானவர் டெம்பிள் ஆரம்ப ஜெபம் செய்தார். பள்ளி தலைமை ஆசிரியர் சரோனின்சுதா வரவேற்று பேசினார். பள்ளி தாளாளர் பிரபாகர் முன்னிலை வகித்தார். இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக உடன்குடி தேர்வுநிலை பேரூராட்சி மன்ற தலைவர் ஹூமைரா அஸ்ஸாப் கல்லாசி கலந்துகொண்டு மாணவிகளுக்கு இலவச சைக்கிள்களை வழங்கினார்.

ஆத்தூர்

வடக்கு ஆத்தூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் தமிழ்நாடு அரசு சார்பில் மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில் ஆத்தூர் பேரூராட்சி மன்ற தலைவர் கமால்தீன் கலந்து கொண்டு மாணவ, மாணவியருக்கு இலவச சைக்கிள்களை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் பள்ளி தலைமை ஆசிரியர் அன்னலட்சுமி, பள்ளி ஆசிரியர்கள், மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்