தொழில்முனைவோருக்கானஉணவு பதப்படுத்துதல் செய்முறை பயிற்சி

உடன்குடியில் தொழில்முனைவோருக்கான உணவு பதப்படுத்துதல் செய்முறை பயிற்சி வருகிற 27-ந் தேதி தொடங்குகிறது

Update: 2023-02-20 18:45 GMT

உடன்குடியில் தொழில்முனைவோருக்கான உணவு பதப்படுத்துதல் செய்முறை பயிற்சி வருகிற 27-ந் தேதி தொடங்குகிறது.

இது குறித்து மத்திய கதர், கிராம தொழில்கள் இயக்குனர் பிரபாகரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

பயிற்சி

மத்திய கதர் மற்றும் கிராமத் தொழில்கள் ஆணையத்தின் கீழ் செயல்பட்டு வரும் மத்திய பனைவெல்லம் மற்றும் பனை பொருட்கள் நிறுவனம் சார்பில் தொழில் முனைவோருக்கான உணவு பதப்படுத்துதல் செய்முறை பயிற்சி தூத்துக்குடி மாவட்டம் உடன்குடியில் பவித்ரா ரெடிமேடு கார்மென்ட் மையத்தில் வருகிற 27-ந் தேதி முதல் 3.3.23 வரை 5 நாட்கள் நடக்கிறது. பயிற்சி தினமும் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நடக்கிறது.

பயிற்சியில் சாம்பார்பொடி, ரசப்பொடி, குழம்பு மிளகாய்பொடி, மட்டன் பொடி, சிக்கன் பொடி பிரியாணி பொடி, வத்தல்குழம்பு, மீன்மசாலா, கரம் மசாலா, செம்பருத்தி ஜூஸ், பூண்டு, நெல்லிக்காய், நார்த்தங்காய், மாங்காய் ஊறுகாய்கள், பாதாம் மில்க், ஒரிஜினல் மேங்கோ ஸ்குவாஷ், உடனடி ரோஸ்மில்க், சாக்லேட்மில்க், கிரேப்ஜுஸ், ஆரஞ்ச்ஜூஸ் உள்ளிட்ட 20 வகையான உணவு பதப்படுத்துதல் மற்றும் செய்முறைகள் நேரடியாக செய்து காண்பிக்கப்பட உள்ளது.

தகுதிகள்

இந்த பயிற்சியில் தொழில் முனைவோர்களும், கல்லூரி மாணவ, மாணவிகள், இல்லத்தரசிகள் கலந்துகொள்ளலாம். பயிற்சியில் கலந்து கொள்ள ஆர்வம் உள்ளவர்கள் கலந்து கொண்டு சொந்தமாக தொழிலை ஆரம்பித்து மாதம் ரூ.50 ஆயிரம் வரை வருமான பெற்று பயன்பெற இந்த பயிற்சி உதவுகிறது.

இந்த பயிற்சியில் 5-ம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு வரை முடித்தவர்கள், 18 முதல் 65 வயது வரை உள்ளவர்கள் கலந்து கொள்ளலாம்.

பயிற்சிக்கு பிறகு பாரத பிரதமரின் வேலைவாய்ப்பு உருவாக்கும் திடடத்தின் கீழ் மத்திய அரசின் மானியத்துடன் கூடிய 25 சதவீதம் மற்றும் 35 சதவீதம் வங்கி கடன் பெற்று தொழில் தொடங்க வழிகாட்டப்படும். இந்த நல்ல வாய்ப்பை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

பயிற்சி முடிவில் மத்திய அரசின் சான்றிதழ் வழங்கப்படும். பயிற்சி முன்பதிவு மற்றும் விவரங்களுக்கு 98401 58943, 78128 50358 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்