குடிநீர் வினியோகம் செய்யக்கோரிகாலிக்குடங்களுடன் பொதுமக்கள் திடீர் சாலை மறியல்கோபி அருகே பரபரப்பு

கோபி அருகே- குடிநீர் வினியோகம் செய்யக்கோரி காலிக்குடங்களுடன் பொதுமக்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனா்

Update: 2023-05-13 20:56 GMT

கோபி அருகே குடிநீர் வினியோகம் செய்யக்கோரி காலிக்குடங்களுடன் பொதுமக்கள் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

சாலை மறியல்

கோபி ஒன்றியத்துக்கு உள்பட்டது நஞ்சை கோபி ஊராட்சி. இங்குள்ளவர்களுக்கு பவானி ஆற்று குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இதனிடையே கடந்த சில நாட்களாக இங்குள்ளவர்களுக்கு குடிநீர் முறையாக வினியோகம் செய்யப்படவில்லை என கூறப்படுகிறது. இதனால் இங்குள்ளவர்கள் குடிநீர் கிடைக்காமல் அவதிப்பட்டனர். மேலும் இதுகுறித்து ஊராட்சி நிர்வாகத்திடம் பொதுமக்கள் புகார் தெரிவித்தனர். ஆனால் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என தெரிகிறது.

இந்த நிலையில் நேற்று அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் காலிக்குடங்களுடன் ஒன்று திரண்டு கோபியில் இருந்து அந்தியூர் செல்லும் ரோட்டில் புதுக்கரைப்புதூர் என்ற இடத்துக்கு திரண்டு வந்தனர். பின்னர் அவர்கள் அனைவரும் குடிநீர் முறையாக வினியோகம் செய்யக்கோரி திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர்.

பேச்சுவார்த்தை

இதுபற்றிய தகவல் கிடைத்ததும் கோபி போலீஸ் இன்ஸ்பெக்டர் சண்முகவேலு மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது பொதுமக்களிடம் போலீசார் கூறுகையில், 'இதுகுறித்து சம்பந்தப்பட்ட உயர் அதிகாரிகளின் கவனத்துக்கு கொண்டு சென்று விரைவில் குடிநீர் வினியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்,' என்றனர். இதில் சமாதானம் அடைந்த பொதுமக்கள் தங்களுடைய சாலை மறியல் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் சிறிது நேரம் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. 

Tags:    

மேலும் செய்திகள்