மாற்றுத்திறன் மாணவர்களுக்கு விழிப்புணர்வு கலைநிகழ்ச்சி

செங்கோட்டையில் மாற்றுத்திறன் மாணவர்களுக்கு விழிப்புணர்வு கலைநிகழ்ச்சி நடந்தது.

Update: 2022-11-25 18:52 GMT

செங்கோட்டை:

செங்கோட்டை அரசு பொது நூலக கட்டிடத்தில் வைத்து ஒருங்கிணைந்த பள்ளி கல்வி, செங்கோட்டை வட்டார வளமையம் சார்பில் மாற்றுத்திறன் மாணவர்களுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு செங்கோட்டை நகர தி.மு.க. செயலாளர் ஆ.வெங்கடேசன் தலைமை தாங்கினார். மாவட்ட பொருளாளர் எம்.ஏ.எம்.ஷெரீப் முன்னிலை வகித்தார். செங்கோட்டை மேலூர் அரசு உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் ராஜன் வரவேற்று பேசினார். தொடர்ந்து மாணவ-மாணவிகளுக்கு பல்வேறு போட்டிகள், கலைநிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு, அதில் வெற்றி பெற்றவர்கள் மற்றும் கலந்து கொண்டவா்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சியில் நூலகர் ராமசாமி, செங்கோட்டை வட்டார வளமைய மேற்பார்வையாளர் சுப்புலட்சுமி, கிளாங்காடு தி.மு.க. கிளை செயலாளர் ராமன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை சிறப்பு பயிற்றுனர்கள் செய்திருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்