'நீட்' தேர்வை ரத்து செய்யக்கோரிதிராவிட கழக மாணவரணி ஆர்ப்பாட்டம்

திராவிட கழக இளைஞரணி மற்றும் மாணவரணி சார்பில், தேனி பழைய பஸ் நிலையம் அருகில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

Update: 2023-08-22 18:45 GMT

திராவிட கழக இளைஞரணி மற்றும் மாணவரணி சார்பில், தேனி பழைய பஸ் நிலையம் அருகில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு சட்டக்கல்லூரி மாணவர் பூவரசன் தலைமை தாங்கினார். இளைஞரணி தலைவர் பிரேம்குமார் வரவேற்றார். தி.க. மாவட்ட செயலாளர் மணிகண்டன் ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்து பேசினார்.

இதில் ஆதித்தமிழர் பேரவை மாவட்ட செயலாளர் சுரேஷ், விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செய்தி தொடர்பாளர் அன்புவடிவேல், ஆதித்தமிழர் கட்சி மாவட்ட செயலாளர் முல்லைஅழகர் மற்றும் பல்வேறு அமைப்புகளின் நிர்வாகிகள் கலந்துகொண்டு பேசினர். ஆர்ப்பாட்டத்தின் போது 'நீட்' தேர்வை ரத்து செய்யக்கோரி கோஷங்களை எழுப்பினர்.

Tags:    

மேலும் செய்திகள்