கால்பந்து போட்டி; கொடைக்கானல் அணி சாம்பியன்

கொடைக்கானலில் நடந்த மாவட்ட அளவிலான கால்பந்து போட்டியில் கொடைக்கானல் அந்தோணியார் அணி சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றது.

Update: 2022-05-31 14:44 GMT

கொடைக்கானலில் நடைபெற்று வரும் கோடை விழாவையொட்டி தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில் பல்வேறு விளையாட்டு போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இதன் ஒருபகுதியாக மாவட்ட அளவிலான கால்பந்து போட்டி, மூஞ்சிக்கல் விளையாட்டு மைதானத்தில் 2 நாட்களாக நடைபெற்றது. மொத்தம் 18 அணிகள் கலந்துகொண்டன.

விறுவிறுப்பாக நடைபெற்ற போட்டியில் இறுதிப்போட்டிக்கு ெகாடைக்கானல் அந்தோணியார் அணியும், கொடைக்கானல் டேஞ்சரஸ் புட்பால் அணியும் தகுதிபெற்றன. பின்னர் நடந்த இறுதிப்போட்டியில் கொடைக்கானல் அந்தோணியார் அணி, டேஞ்சரஸ் புட்பால் அணியை வீழ்ச்சி சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றது.

பின்னர் போட்டியில் வெற்றிபெற்ற அணிகளுக்கு பரிசளிப்பு விழா நடைபெற்றது. இதில், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு (பயிற்சி) அருண்கபிலன், ஆர்.டி.ஓ. முருகேசன், சுற்றுலா அலுவலர் சிவராஜ், புனித பீட்டர் பள்ளி தாளாளர் ரோகன் சாம்பாபு உள்பட பலர் கலந்துகொண்டு வெற்றிபெற்ற அணிகளுக்கு பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கினர்.

கோடைவிழா போட்டிகளில் இன்று (புதன்கிழமை) மினி மாரத்தான் போட்டி, கொடைக்கானல் ஏரிச்சாலையில் நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை மாவட்ட விளையாட்டு அலுவலர் ரோஸ் பாத்திமா மற்றும் அலுவலர்கள் செய்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்