கோத்தகிரியில் சத்துணவு ஊழியர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

கோத்தகிரியில் சத்துணவு ஊழியர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

Update: 2023-02-06 18:45 GMT

கோத்தகிரி

கோத்தகிரி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன் நேற்று மாலை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு கோத்தகிரி வட்டகிளை தலைவர் சசிகலா தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் செல்லதுரை முன்னிலை வகித்து பேசினார். செயலாளர் ராமு அனைவரையும் வரவேற்றார். இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் சத்துணவு ஊழியர்களுக்கு குடும்ப பாதுகாப்புடன் கூடிய சட்டப்பூர்வ ஓய்வூதியம் ரூ.6 ஆயிரத்து 750 வழங்க வேண்டும். காலி பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும். ஓய்வு பெற்றவர்களுக்கு வழங்க வேண்டிய நிலுவைத் தொகை மற்றும் பணப்பலன்களை உடனடியாக வழங்க வேண்டும். மருத்துவ காப்பீட்டு அட்டை வழங்க வேண்டும். உணவு மானியத்தை மாதம் தோறும் 5-ந் தேதிக்குள் வழங்க வேண்டும். காலிப்பணியிடங்களில் சத்துணவு ஊழியர்களுக்கு 50 சதவீத ஒதுக்கீடு செய்து பதவி உயர்வு வழங்க வேண்டும் என்கிற கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் சுமார் 50-க்கும் மேற்பட்ட சத்துணவு ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்