சத்துணவு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

சத்துணவு ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

Update: 2022-12-27 18:45 GMT


தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ள காலை உணவு திட்டத்தை தமிழக அரசே ஏற்று நடத்த வேண்டும். அனைத்து சத்துணவு ஊழியர்களுக்கும் முறையான காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். ஊரக வளர்ச்சித்துறை காலி பணியிடங்களில் தகுதி அடிப்படையில் சத்துணவு ஊழியர்களுக்கு 50 சதவீத அடிப்படையில் பதவி உயர்வு வழங்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடலூர் பழைய கலெக்டர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட தலைவர் மணிதேவன் தலைமை தாங்கினார். மாவட்ட நிர்வாகிகள் பாலசுந்தரி, ஜெயந்தி, கீதா, பன்னீர்செல்வம், அறிவழகன், குணசேகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில செயலாளர் குணா தொடக்க உரையாற்றினார். ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட செயலாளர் ரெங்கசாமி கலந்து கொண்டு கோரிக்கைகளை விளக்கி பேசினார். இதில் நிர்வாகிகள் சண்முகசிகாமணி, ராஜேந்திரன், நடராஜன் உள்பட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டன. முடிவில் மாவட்ட பொருளாளர் தணிகாசலம் நன்றி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்