சத்துணவு ஊழியர்கள் காத்திருப்பு போராட்டம்

பதவி உயர்வு வழங்க கோரி சத்துணவு ஊழியர்கள் காத்திருப்பு போராட்டம் நடத்தினர்.

Update: 2023-09-12 19:00 GMT

கோவை

சமையல் உதவியாளர்கள் உள்ளிட்டோருக்கு பதவி உயர்வு வழங்க வேண்டும். தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்ட சுதா, சுசிலா ஆகிய 2 பேரையும் மீண்டும் அதே இடத்தில் பணி நியமனம் செய்ய வேண்டும். ஆனைமலை ஒன்றியத்தில் கடந்த 5 ஆண்டுகளாக வழங்கப்படாமல் உள்ள மகப்பேறு விடுப்பு தொகையை உடனடியாக வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கம் சார்பில் கோவை கலெக்டர் அலுவலக வளாகத்தில் நேற்று காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது. போராட்டத்திற்கு மாவட்ட தலைவர் ராமசாமி தலைமை தாங்கினார். இதில் ஏராளமான சத்துணவு பணியாளர்கள் கலந்துகொண்டனர். தொடர்ந்து அதிகாரிகளுடன் நடந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதால், சத்துணவு ஊழியர்கள் போராட்டத்தை கைவிட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்